இந்த ஊருல கிட்டத்தட்ட மூணு வாரமா மழையா பெய்யுதுங்க. என் பையன் பாவம் வெளியே விளையாட கூட போக முடியாம, எப்போ பார்த்தாலும் "TAB"ம் கையுமாவே இருக்கான். எத்தன தடவைதான் அந்தக் கண்ணாடி கதவைத் தட்டித் தட்டி "rain rain go away"ன்னு பாடிட்டிருப்பான். அவனுக்கும் போர் அடிக்கும்ல. மழையே இல்லாம காய்ந்துப் போய் கிடக்குற நம்ம சொந்த ஊரு பக்கம், கொஞ்சம் (கொஞ்சம் என்ன, முடிந்தால் நிறையவே), இந்த மழையை பார்சல் பண்ணி அனுப்ப முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். ஒரு நாள், ரெண்டு நாளுன்னா, மழை பெய்யரதப் பார்க்கறதே, ரொம்ப ரசனையா தான் இருக்கு, அதுவே மாசக் கணக்குலன்னா, தாங்காதுடா சாமி... அதுவும் நான் கார் ஓட்டிக் கத்துகிட்டு, licence வாங்க ஆவலா (?!) இருக்கற இந்த சமயத்துல, இப்படி விடாம பெய்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம்.
ஏம்மா இப்படி ஏதேதோ வெட்டி பேச்சு பேசிட்டிருக்கன்னு மட்டும் கேட்டுறாதிங்க ப்ளீஸ், வெட்டியா இருக்கறதும், வெட்டியா பேசறதும், topic எதும் இல்லாம இப்படி வெட்டியா எதாச்சும் எழுதறதும் எவ்வளோ கஷ்டம்ன்னு, வெட்டியா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் புரியும்.! (யாருக்காச்சும் புரிஞ்சுதா பாஸ்? ).
சரி, கோபப்படாதிங்க. இப்போ சீரியஸா எதாச்சும் பேசலாமா? ம்ம்ம்... இருங்க இருங்க மூளையை கசக்கி யோசிக்கறோம்ல!!! ஓகே போன வாரம் "உலக வரலாற்றில் முதன் முதலாக" நான் கார் ஓட்டக் கத்துக்கறதுக்கு க்ளாஸ் போயிருந்தேன்ங்க (அட நிஜமாதான்). அந்த வரலாற்று நிகழ்ச்சியத்தான் கொஞ்சம் கிண்டிக் கிளறப் போறேன் இப்போ. (என்னடா இதையெல்லாம் வரலாறுங்கிறேனேன்னு பார்க்கிறீங்களா, நாங்கல்லாம் ஸ்டீரிங்க பிடிக்கறதே ஒரு வரலாறுதானங்க.). இது ரொம்ப ரொம்ப சீரியஸான விஷயம், so... கொஞ்சம் சீரியஸா படிக்கறீங்க...!! :-)
இந்த ஊருல கார் driving licence வாங்கணும்னா முதல்ல ஒரு driving written test எழுதி பாஸ் பண்ணனும். அதுக்கு apply பண்றதுக்கு என்னன்னமோ process இருக்குங்க, அதையெல்லாம் எங்க வீட்டுக்காரர் பார்த்துக்கிட்டார் (இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் நம்ம மூளையை கசக்ககூடாது). நம்ம காரியதுல்ல மட்டும் கண்ணா இருக்கணும்னு முடிவு பண்ணி, கஷ்டப் பட்டு, சோறு தண்ணி இல்லாம (விரதம் இருந்து - நான் இல்லைங்க, என் வீட்டுக்காரர் !! ;-)), ராத்திரி பகல் பாராம, படிச்சி, ஒரு வழியா கலெக்டர் எக்ஸாம பாஸ் பண்ணியாச்சு (அதுவும் first attempt லயே - note this point your honor).
Written test பாஸ் பண்ண உடனே, என்னமோ licenceயே கையில வாங்கிட்ட மாதிரி நினைப்பு, ஹோ... writtenயே பாஸ் பண்ணிட்டோம், கார ஓட்டறது என்ன பெரிய விஷயமான்னு கொஞ்சம் தெனாவெட்டாதாங்க திரிஞ்சிடிருந்தேன். இதுல அப்பப்போ "ஏங்க இப்படி ஓட்டறிங்க, அப்படி திருப்பக் கூடாதுன்னு, ஸ்பீட் லிமிட்க்கு மேல போறீங்க"ன்னு வீட்டுக்காரருக்கு கொஞ்சம் ப்ரீ அட்வைஸ அள்ளி விட, பாதிப்படைந்த மனுஷன் (பொறாமையில) "நீ சரிப்பட்டு வரமாட்டன்னு" சொல்லி ஒரு driving schoolக்கு போனப் போட்டு கிளாஸ்க்கு புக் பண்ணிட்டார் (;-( ).
போன வாரம் சனிக்கிழமை முதல் கிளாஸ். ஒரு ஆண்ட்டி (கொஞ்சம் பாட்டி தான், இருந்தாலும் பியூட்டியா இருந்தனால ஆண்ட்டின்னே சொல்லிக்கறேன் - எங்களுக்கும் rhymingஆ பேச வருமுல்ல!!!) தான் கத்துக் கொடுக்க வந்திருந்தாங்க. சரி எப்படியும், ஒரு கிளாஸ் (one class - 2 hours) எப்படியும், எப்படி ஸ்டீரிங் பிடிக்கறது, எப்படி சீட் அட்ஜஸ்ட் பண்றதுன்னு, தியரியா தான் எனக்கு சொல்லிக் கொடுக்கப் போறாங்க, அதனால இன்னைக்கு எப்டியும் ஓட்டுறதுல இருந்து தப்பிச்சிடலாம்ன்னு நினைச்சேன்.
காலைல 10.30க்கு அப்பாயின்மெண்ட். 10.25கெல்லாம் ஷார்ப்பா வந்து, அபர்ட்மெண்ட் கேட் பக்கத்துல அவங்க வண்டிய நிறுத்திட்டு கால் பண்ணாங்க. நாங்க கிளம்பிப் போனதும், "Learner's permit"அ வாங்கி வச்சிக்கிட்டு, என்னைப் பார்த்து "come and sit"ன்னு டிரைவர் சீட்டைக் காட்டினாங்க. எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சி. அவ்ளோ நாள் சும்மா ஜாலியா உதார் விட்டுகிட்டிருந்த என்னை எடுத்த எடுப்பில் டிரைவர் சீட்ல உட்கார சொன்னா, என்ன செய்யறது நான். கொஞ்சம் நேரம் பதறிப் போய், என் புருஷனையும், காரையும், அந்த ஆண்ட்டியையும் மாறி மாறிப் பார்த்துட்டு, வேற வழி இல்லாம ஏறி உட்கார்ந்தேன். சத்தியமா சொல்றேங்க பண்ணிரண்டாவது முழுப் பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்காம போய் உட்கார்ந்தா, வயித்துக்குள்ள ஏதோ ஒன்னு பிசையுமுள்ள, அப்படி ஒரு bad feeling :-(, இத்தனை வருஷத்துல, இதுக்கு முன்னாடி, விளையாட்டா கூட, எந்த கார்லயும் டிரைவர் சீட்ல உட்கார்ந்தது இல்ல (தெரியாத்தனமா எதுலயாவது கையோ, காலோ பட்டு, கார் நகர்ந்து போய் எதுலயாவது மோதிடுச்சின்னா).
(இதுக்கு மேலக் கதைய நாளைக்கு continue பண்றேங்க)...